கோவர்த்தனம்

சித்தத் தெளிவெனுந்த தீயின்முன் நிற்பாயோ? - மாயையே ! என்னைக் கெடுப்பதற் கெண்ணமுற்றாய் கெட்ட மாயையே ! - நான்உன்னைக் கெடுப்ப துறுதியென்றேயுணர் -மாயையே ! - பாரதி

Thursday, April 20, 2006

11.இன்றைய கார்ட்டூன்


நெசமாவே நிலம இப்படித்தான் இருக்கு.

Wednesday, April 19, 2006

10.இவர்கள் சந்தித்தால்....

சமீபத்தில் எனக்கு மின்னஞ்சலில் வந்த ஒரு துணுக்கு
உங்கள் ரசனைக்கு...

கரைவேட்டியும் கறைஜீன்சும் சந்தித்தன எதிர்பாரமல்...

கரை: "வணக்கம்"
கறை: "மன்னிக்கவும். அரசியலும் அர்சியல்வாதியும் எமக்கு பிடிக்காது"
கரை: ஹா ஹா... தம்பி, இதுவும் அரசியல் தான்"
கறை: "விட்டுவிடுங்களேன் வேண்டாம்"
கரை: "காரணம் சொல் தம்பி"
கறை: அடுக்கிக்கொண்டே போகலாம்"
கரை: எங்கே ஒன்று, இரண்டு என்று வரிசைப்படுத்து"
கறை: "சொல்லில் சுத்தமில்லை. சொன்னதை சொன்னாற்போல் செய்வதில்லை"
கரை: "நீங்கள் உறுதியளிக்கும் தேதியில் பணியை முடித்ததுண்டோ?"
கறை: சரி..அடிக்கடி கூட்டணி மாற்றம், கட்சிமாற்றம்?""
கரை: "அடிக்கடி கம்பெனி மாற்றம்?"
கறை: "நாங்கள் மாறுவது தொழில் வளர்ச்சிக்கு (carrier growth)"
கரை: "நாங்கள் மாறுவதும் கட்சி வளர்ச்சிக்கும் கொள்கைக்கும்.."
கறை: "இல்லை பின்னால் இருப்பது பணமல்லவோ?"
கரை: "உங்களுக்கு எப்படி?"
கறை: "லஞ்சம், இதற்க்கென்ன பதில்?"
கரை: "வரியை குறைக்க எத்தனை தில்லுமுல்லு சொல்லு?"
கறை: "இப்படி பொதுவாக பேசக்கூடாது.."
கரை: "அதே...அதே...!"
கறை: "விடுங்கள்..சட்டமன்றத்தில் எப்போதும் வெட்டி பேச்சு"
கரை: "அட நீங்கள் மின்னஞ்சலில் பேசும் பேச்சு?"
கறை: "அதென்ன.... நினைத்தால் வெளிநாட்டு பயணம்?"
கரை: "அதென்ன கஷ்டமர் நினைக்காமல் அவரிடத்து திடீர் பயணம்?"
கறை: "பார்டீ பார்டீ( கட்சி).. இது தானா எப்போதும்?"
கரை: "பிறந்தா பார்டீ, போணா பார்டீ, வந்தா பார்டீ..இரவில் பார் (BAR), பகலில் டீ"
கறை: அய்யா ஆளை விடுங்கள்..என்ன வேணும் சொல்லுங்கள்"
கரை: "ஓட்டு போடு தம்பி. உங்க கையில தான் இருக்கு எங்க தலையெழுத்தும், இந்த நாட்டோட தலையெழுத்தும்..ஒரு சாதாரண கைநாட்டுக்கு இருக்கிற கடமை உணர்வு உனக்கில்லையேப்பா.
உங்க ஓட்டு வைக்குமே தப்பான அரசியலுக்கு வேட்டு..
கறை கண்டுபிடிப்பதென்றால் வெள்ளை துணியிலும் கண்டுபிக்கலாம்...
ஓட்டு போடு...... இல்லையெனில் ஓ போடு (49 ஓ)...

Monday, March 27, 2006

9.இனிமையான காலைக்கு 5 படிகள்

1.கண்களை மூடுங்கள்
2.மூச்சை நன்றாக இழுத்து விடுங்கள்
3.கைகளை அகல விரியுங்கள்
4.இதயம் துடிப்பதை உணருங்கள்
5.இப்படி சொல்லுங்கள் : "ரொம்ப சீக்கிரம் எழுந்துட்டேன் போல. மறுபடியும் தூங்கிடலாம்!"

Thursday, March 23, 2006

8.ஜாலி கணக்கு

புத்திசாலி பையன் + புத்திசாலி பெண் = ஜாலி

முட்டாள் பையன் + புத்திசாலி பெண் = பாக்கெட் எம்டி

புத்திசாலி பையன் + முட்டாள் பெண் = கர்ப்பம்

முட்டாள் பையன் + முட்டாள் பெண் = கல்யாணம்

Wednesday, March 15, 2006

7.நம்ம ஊரு காமெடி!



No Comments !!

Monday, March 13, 2006

6.நிழற்படம் !


இந்த படத்தில் ஓர் சிறப்பம்சம் உள்ளது. கண்டுபிடித்தவர்கள் கூறுங்கள் பார்க்கலாம்.

Friday, March 10, 2006

5.கடவுள் பாதி.. மிருகம் பாதி..


பெரும்பாலான கமல் படங்கள் A Class-ல் மட்டும் வெற்றியடைகிறது. இதற்கு காரணம்,காட்சி அமைப்பு மற்றும் வசனங்கள் அனைவராலும் புரிந்து கொள்ள இயலாமையே என நினைக்கிறேன். இதனால் பல நல்ல வசனங்கள் கூட அனைவரையும் சென்றடையாமல் போய்விடுகிறது. ஆளவந்தான் படத்தில் கமல் பேசும் இந்த வசனம் என்னை மிகவும் ரசிக்கவைத்தது.

  • சிலந்திகள் பெண்கள்
    பூச்சிகள் ஆண்கள்!


  • பெண்ணை நம்பி பிறந்தபோதே தொப்புள் கொடிகள் அறுபடுமே!
    மண்ணை நம்பும் மாமரம் ஒருநாள் மாபெரும் புயலில் வேரறுமே!
    உன்னை நம்பும் உறுப்புகள் கூட ஒருபொழுதுன்னை கைவிடுமே!
    இதில் பெண்ணை மட்டும் நம்பும் நம்பக
    பிணவாழ் வரை பின்வருமா?


  • சிற்பமான பெண்டிருந்து தேடி ஓடும் மானிடா
    அற்பமான மாதரோடு ஆசைக் கொள்வதேனடா?
    கற்பு ஒன்று இருக்குதோ?
    காவல் ஒன்று இருக்குதோ?
    கற்பமெனும் பையினோடு கவசமிட்டு இருக்குதோ?